1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோமாதா பூஜை செய்ய சொந்தமாக பசு வைத்திருக்க வேண்டுமா...?

வீட்டில் பசு இருப்பவர்கள்தான் கோமாதா பூஜையை செய்யவேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி,  இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம்.

பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது.
 
சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
 
பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 
பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
 
கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா பணக் கஷ்டம் நீங்கும்  
 
ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.