1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அனுமனுக்கு அணிவிக்கப்படும் மாலைகளின் மகிமைகள் என்ன...?

ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின்  தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.
 
வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
 
ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.
 
போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள  வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.
 
ஒரு முறை சீதாதேவி தனது நெற்றி யில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே! தாங்கள்  நெற்றில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார்.
 
அதற்கு சீதாதேவி, “எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடு கிறேன்” என்று  பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என் பதற்காக தன் உடல் முழுவதும்  செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.
 
இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழு வதும் பூசுகின்றனர்.