வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோவிலில் செய்ய வேண்டியவை வேண்டாதவை....!!

அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயா இதை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக் கூடாது. தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது. மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
 
பிரம்மா, விஷ்ணு, சிவன், இம்மூவரை வணங்கும்போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும், தகப்பனாரையும்  வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
 
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும்போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
 
பூமியில் நெடுஞ்சாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.