ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீபம் ஏற்றும் விளக்கின் தன்மைகளும் அதன் பலன்களும்...!!

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு  பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். 

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு - பீடை விலகும். வெள்ளி விளக்கு - திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு - தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு - சனி கிரக தோஷம் விலகும்.
 
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன்  நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள்  வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். 
 
வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
 
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
 
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம். திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல். வியாழன் -  குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி. சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.