வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வரம் கொடுத்தவன் தலையிலே கை வைத்த பஸ்மாசுரன் - புராணக்கதை

கோரி என்றால் குகை என்று பொருள். சிவனின் குகை என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இந்த குகையை உருவாக்கியதே சிவன் தான் என்கிறது ஸ்தல  வரலாறு.
பஸ்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பஸ்மாசுரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பஸ்மாசுரனின் முன் தோன்றினார்.  தான் எவர் தலையில் கை வைத்தாலும் அவர் எதிர்ந்து சாம்பலாகிவிட வேண்டும் என்று வரத்தை பஸ்மாசுரன் கோரினான். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை வழங்கினார். சிவபெருமான் வரம் வழங்கியது உண்மைதானா என்று பஸ்மாசுரனுக்கு சந்தேகம் தோன்றியது. தனது சந்தேகத்தை சோதித்து பார்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்றான் பஸ்மாசுரன்.
 
பஸ்மாசுரனிடமிருந்து தப்பிக்க ஒரு குகையை உருவாக்கி அதில் மறைந்துகொண்டாராம் சிவபெருமான். சிவேபெருமானை காப்பாற்ற எண்ணிய திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரனின் முன் நின்றார். அவள் அழகில் மயங்கி அசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதம் வேண்டினான். அதற்கு  ஒப்புக்கொண்ட மோகினியும் தன்னைத் தவிர வேறு பெண்ணைக் கண்டுகொண்டும் பார்க்கமாட்டேன் என தலையில் அடித்து சத்தியம் செய்துதர வேண்டினாள்.  அவ்வாறே சத்தியம் செய்ய முற்பட்ட பஸ்மாசுரன் தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்ய அவனே பஸ்மமானான்.
சிவபெருமான் உருவாக்கிய குகை இது தான் என்றும் இன்றுவரை சிவபெருமான் இந்த குகையில் தவம்புரிவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.