திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மகா சிவராத்திரி நாளில் நடந்த வேறு சில புண்ணிய காரியங்கள்...!

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால்  இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. 
மகா பிரளயத்தில் உலகம் அழிய. மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, உமையவள் சிவனாரை நோக்கி கடுந்தவம் இருந்தது இந்தத்  திருநாளில்தான்.
 
ஈசன், லிங்கத்தில் பிரசன்னமானது இந்த நாளில் தான். அடி-முடி தேடிய விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சிவனார் காட்சி தந்த நன்னாளும் இதுவே ஆகும்.
 
பாற்கடலில் கடையும்போது வெளியான விஷத்தை சிவபெருமான் சாப்பிட. அதை விழுங்காதபடி தடுத்தார் உமையவள். இதனால், ஈசனுக்கு நஞ்சுண்டன், நீலகண்டன் எனும் திருநாமங்களைப் பெற்றார். அந்த நாளும் மகாசிவராத்திரிதான்.
 
அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் எனும் அஸ்திரத்தைப் பெற்றது இந்த நாளில் தான். பகீரதன் ஒற்றைக் காலில் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாளூம் இதுதான்.
 
திருக்கடையூர் திருத்தலத்தில். மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த அற்புதமான நாளும் இதுவேயாகும். கண்ணப்ப நாயனாரின் கதை தெரியும்தானே. சிவனாருக்காக, தன் கண்ணையே பெயர்த்தெடுத்துத் தந்தாரே. அது இந்த நாளில்தான்.
 
ஸ்ரீபார்வதிதேவி தவமிருந்து வழிபட்டு சிவனில் பாதியைப் பெற்ற புனித நாளும் மகா சிவராத்திரியில்தான். இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.
 
மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
 
முதல் கால பூஜை - இரவு 7:30
இரண்டாம் கால பூஜை இரவு 10:30
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:00
நான்காம் கால பூஜை அதிகாலை 4:30 மணிக்கு. 
 
சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக  அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.