1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பகவான் ஸ்ரீ ரமணரின் சில அற்புத பொன்மொழிகள் !!

நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால், அது தானாகவே கும்பத்தில் (நிறுத்தல்) உன்னை கொண்டு சேர்த்து விடும். இது பிராணாயாமம்.

நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. 
 
மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம். 
 
உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும். மனதை நீ வெளி விஷயங்களிலும், எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது. 
 
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவாலோ, சோம்பலிலோ வீணாக்காதே.
 
யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள்.