வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (16:01 IST)

வைகாசி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை வரும் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
 
கேரளா‌வி‌ல் உ‌ள்ள புக‌ழ்பெ‌ற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் வைகாசி மாத பூஜை  14ம் தேதி (திங்கட்கிழமை)  நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
 
சப‌ரிமலை ஐய‌ப்ப‌ன் கோ‌யி‌லி‌ல், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் ‌கோ‌யி‌ல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, வைகாசி மாத பூஜைக்காக வரும் 14-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்ட உள்ளது. 15-ந்தேதி முதல் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களப பூஜை, களபாபிஷேகம், படி பூஜை உள்பட பல சிறப்பு பூஜை- வழிபாடுகள் நடைபெறும். 19-ந்தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
 
அதன் பின்னர் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் கிடையாது. 25ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.