வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (13:17 IST)

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - கும்பம்!

எதிலும் புரட்சியையும் புதுமையையும் புகுத்துபவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019  வரை உள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு 7&ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தியனாரே! திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே! தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
 
 கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். 
 
ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.  
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் பூர்வ புண்யாதிபதியும்&அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் மத்தியில் நிலவிய கோப, தாபங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் கூடாபழக்கங்களிலிருந்து விடுபடுவார்.  
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் ராசிநாதனும்&விரையாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பியின் நட்பு கிடைக்கும். வீட்டை புதுப்பிக்கும் முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். 
 
உங்களின் தன&லாபாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு. 
 
     மாணவ&மாணவிகளே! உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்புக் கூடும்.  
 
கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. ஆரோக்யம் சீராகும். கோபம் விலகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தலைக்கு நெருக்கமாவீர்கள்.  
 
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். 
 
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் வந்து சேருவார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். ஸ்பெகுலேஷன், பெட்ரோ&கெமிக்கல், அழகு சாதனப் பொருட்கள், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார். 
 
உத்யோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். 
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருக்கும் கேதுபகவான் ராசிக்கு 12&ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். மகிழ்ச்சி உண்டாகம். உங்களின் பலவீனங்களையெல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். 
 
உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பேசத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 
 
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.   
          
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் திருதியாதிபதியும்&ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் இளைய சகோதர வகையில் அலைச்சலும், செலவும் இருக்கும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு.  
 
உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷங்களில் சந்தித்து மகிழ்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை எப்படி பைசல் செய்யலாமென யோசிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். 
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். அவருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருக்கிறது. 
 
   வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும் சுடுதல் நேரம் ஒதுக்கி பணிப்புரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.   
 
        அகதி போல அலைக்கழிக்கப்பட்ட உங்களை இந்த ராகு&கேது மாற்றம் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிக்க வைக்கும்.  
 
பரிகாரம்
 
பண்ரூட்டி அருகிலுள்ள திருவதிகையில் அருள்பாலிக்கும். ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீவீரட்டானேஸ்வரரை வணங்குங்கள். களவு போனவர்கள் வீட்டிற்கு சென்று உதவுங்கள்.