வீட்டில் பூஜையில் வைக்க கூடாத படங்கள் எவை தெரியுமா!
பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.
சனீஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.
நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.
சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.
கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி படமும் வைக்க கூடாது.
தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது.
தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம் வைக்க கூடாது.
ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபமாக, தவ நிலையிலுள்ளதும் தலை விரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.
ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.