பாண்டவர்களின் வெற்றியை தீர்மானித்த கிருஷ்ணன்
உலகில் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் பல லீலைகளைப் புரிந்துள்ளார். இதற்கு சான்று, பாண்டவர்கள் என்னதான் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் தர்மவழியில் நின்றவர்கள் என்றாலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் தலையீடு இல்லாமல் குருஷேத்திர போரில் பாண்டவர்களால் வெற்றி கொண்டிருக்க முடியாது.
பாண்டவர்கள் குருஷேத்திரபோரில் வெற்றி பெறவும் சூழ்ச்சி செய்கின்றார் கிருஷ்ணன். அதற்காக சாதுர்யமான திட்டம் ஒன்றினை வகுக்கின்றான். அமாவாசை தினத்திற்கு முதல்நாள் பாண்டவர்களை அழைத்திக்கொண்டு கிருஷ்ணன் பித்ருக்களுக்கு திதிகொடுக்கும் நதிக்கரைக்குச் செல்கின்றனர். அனைத்தும் கிருஷ்ணனின் ஏற்பாட்டின்படியே நடக்கிறது. பாண்டவர்களும் திதிகொடுக்க ஆயத்தமாகின்றர்கள்.
அப்போது அந்த இடத்திற்கு சூரியனும், சந்திரனும் குழப்பத்தோடு வருகின்றனர். அமாவாசையோ நாளை! இன்றே திதிகொடுப்பது ஏனோ? என அவர்கள் கிருஷ்ணனிடம் கேள்வியை முன்வைக்கின்றனர். அதற்கு சூரிய சந்திரரே உங்கள் சந்தேகத்திற்கு மகரிஷியே பதில் அளிப்பார் என கிருஷ்ணன் கூற கேள்வி மகரிஷியின் பக்கம் திரும்புகிறது.
சூரிய சந்திரனின் கேள்விக்கு பதில் கூற முன்வந்த மகரிஷி அமாவாசை தினத்தில் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்ற பதில்கேள்வியை மகரிஷி முன்வைக்கிறார். அந்தக் கேள்விக்கு அமாவாசை தினத்தில் நாம் இருவரும் அருகருகே இருப்போம் என சூரிய சந்திரர் இணைந்து மறுமொழி கூறுகின்றனர். தொடர்ந்த மகரிஷி ‘இப்போது நீங்கள் இருவரும் அருகருகே தானே இருக்கின்றீர்கள் அதனால் இன்று தானே அமாவாசை என பதில் கூற, சூரிய சந்திரன் திணறிப்போய் நிற்கின்றனர்.
அதேசமயம் இந்த நாடகத்தின் உள்சூது அறியாத துரியோதனன் அமாவாசை தினத்திற்கு முதல்நாளை அமாவாசை எனக்கருதி போரை ஆரம்பிக்கின்றான். போரில் தோல்வியடைந்து வீழ்கின்றான்.