வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காரடையான் நோன்பன்று கயிறு கட்டிக் கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம்...!

பங்குனி முதல் நாளில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரி தேவியை வழிபடுவதாம் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு.  இந்நாளில் தான் சத்தியவானை எமனின் பிடியில் இருந்து மீட்டாள் சாவித்ரி.
இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர். இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம்  நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர்.
 
கணவர் அல்லது வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும்.
 
விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். அடையோடு உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர்.  குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு இதை சாப்பிட கொடுப்பது மிக அவசியம். அப்போது  தான் நோன்பு முழுமை அடைவதாக ஐதீகம்.
 
இந்த விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்ட பின், மஞ்சள் சரடைக் கட்டிக்  கொள்ளலாம்.
 
சரடு கட்டிக் கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம்:
 
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே!
ஸஹாரித்ரம் தராம்யஹம்!
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸுப்ரீதா பவ ஸர்வதா.
 
உருக்காத வெண்ணையும்ஒரடையும் நான் தருவேன்,
ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய்!
 
என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்லவேண்டும்.