Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பதில் உள்ள அறிவியலும் ஆன்மிகமும்....!

நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யை உச்சம்தலை முதல் கால் வரை தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து தேய்த்து குளிப்பது வழக்கமாக இருந்தது. காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்படுகிறது.
இந்தச் சனிக்கிரகம் உடலுக்குத் தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம்  அடையாளம் காட்டுகின்றது. சனிக்கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய  இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணெய்யில் ஊறிய உடம்பு, தாக்க விடாமல் தடை செய்கின்றது. தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் குளியல்.
இத்தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறிச் செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்தக்  கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணெய்  தேய்த்து குளிக்கும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர். ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் படுவதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :