Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத ராசிப் பலன்கள் - சிம்மம்

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:06 IST)

Widgets Magazine

 
 
 
தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் அதிரடி மாற்றம் உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த சிக்கல்கள் விலகும்.

சகோதர வகையில் இருந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். எதிர்ப்புகள் குறையும். அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உறவினர்களுடனான மோதல் போக்கு மாறும். சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பழுதாகிக் கிடந்த மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிநாதன் சூரியன் சாதகமாக இல்லாததால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது சலிப்படைவீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வந்துப் போகும். சிறுசிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது.

ராசிக்குள் ராகுவும், கேது 7-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பகுதாகும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோப் பிரச்னையை தவிர்க்கப்பாருங்கள். வீண் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். 9-ந் தேதி வரை குரு 3-ல் மறைந்திருப்பதால் மறைமுக அவமானம், வீண் பழி, டென்ஷன், ஓய்வின்மை வந்துச் செல்லும். 10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி 2-ல் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பள்ளி கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் வெற்றி காண்பீர்கள். அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! போராடி சின்ன சின்ன வாய்ப்புகளை பெற வேண்டி வரும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை கடந்து முன்னேறும் மாதமிது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மிதுனம்

கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே! இந்த மாதம் முழுக்க செவ்வாயும், ...

news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்துக் காட்டுபவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் ...

news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மேஷம்

சொல்வன்மையும், செயல்திறனும் கொண்டவர்களே! செவ்வாய் ஆட்சிப் பெற்று ராசிக்குள் ...

news

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்

2016ஆ‌ம் ஆ‌ண்டு பிப்ரவரி மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் ...

Widgets Magazine Widgets Magazine