Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மேஷம்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (22:46 IST)
சொல்வன்மையும், செயல்திறனும் கொண்டவர்களே! செவ்வாய் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால் தடைகளெல்லாம் நீங்கும்.

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடனான மோதல்கள் விலகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

13-ந் தேதி வரை உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியன் லாப வீட்டிலேயே நிற்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பூர்வீக வீட்டை இடித்துக் கட்டுவது அல்லது கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்குகளில் வெற்றி உண்டு.

புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 14-ந் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள், தூக்கமின்மை வந்துச் செல்லும். சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். திருமணமத் தடைகள் நீங்கும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

9-ந் தேதி வரை உங்களின் பாக்யாதிபதி குரு சாதகமாக இருப்பதால் நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். ஆனால் 10-ந் தேதி முதல் குருபகவான் வக்ரமாகி 6-ம் இடத்தில் அமர்வதால் பணப்பற்றாக்குறை இருக்கும். பெரிய நோய்கள் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும். காதல் விவகாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உயர்கல்வி மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றியடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமயோஜித புத்தியாலும், கடின உழைப்பாலும் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.


இதில் மேலும் படிக்கவும் :