Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத ராசிப் பலன்கள் - கும்பம்

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:38 IST)

Widgets Magazine

மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே! செவ்வாய் ஆட்சிப் பெற்று 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரங்களால் பயனடைவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் கொஞ்சம் முன்கோபம் வரும். உணர்ச்சிவசப்படுவீர்கள். சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள்.

9-ந் தேதி வரை குரு உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் தன்னம்பிக்கை உண்டாகும். இங்கிதமாக, இதமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். ராஜ தந்திரத்துடனும் சில இடங்களில் நடந்துக் கொள்வீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டாகும். ஆனால் 10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி 8-ல் மறைவதால் வீண் அலைச்சல், விரயம், ஏமாற்றம், காரியத் தடைகளெல்லாம் வந்துச் செல்லும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் சமுதாயத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் இருந்து வந்த அன்புத் தொல்லைகள் விலகும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். உங்களுடைய ராசிநாதன் சனி சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களே! அயல்நாடு செல்வதற்காக எழுதப்படும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தில் புது வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களும் வருவார்கள்.

புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க சில சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றி கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மகரம்

பெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே! உங்களுடைய ராசிநாதனான ...

news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - தனுசு

உள்ளன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் ...

news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - துலாம்

விறுவிறுப்பையும், உண்மையையும் நேசிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதி செவ்வாய் 7-ம் ...

news

மார்ச் மாத ராசிப் பலன்கள் - கன்னி

தீவிர சிந்தனை அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் யோகாதிபதியான சுக்ரன் ...

Widgets Magazine Widgets Magazine