Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத ராசிப் பலன்கள் - கடகம்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:10 IST)

சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் நடந்துக் கொள்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதல் அறைக் கட்டும் முயற்சியும், தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியும் சாதகமாகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அடகிலிருந்த நகைகளை மீட்க வழி பிறக்கும். இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

வீடு, மனை விற்பது நல்ல விதத்தில் முடியும். குரு சாதகமாக இல்லாததால் தாயாருடன் மனவருத்தம் வரும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் கவனமாக இருங்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். ராகு, கேது சரியில்லாததால் வழக்கை நினைத்தும், பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்தும் அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். நல்ல சந்தர்ப்ப, சூழ்டிலைகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.

சனியும் சாதகமாக இல்லாததால் உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், உத்யோகம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் படிகளில் ஏறும் போது கவனமாக செல்லுங்கள். சூரியனும் சாதகமாக இல்லாததால் திடீர் பயணங்கள் அதிகமாகும். செலவினங்களும் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும்.

கன்னிப் பெண்களே! இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் வந்துப் போகும். வேலையாட்கள், பங்குதாரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வெளிமாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து முடிவெடுப்பது நல்லது. போட்டிகள் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படக்கூடும். கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகள் வெளிப்படும். சகிப்புத் தன்மையாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் சாதிக்கும் மாதமிது.


இதில் மேலும் படிக்கவும் :