வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (12:53 IST)

அதிஷ்டத்தை அள்ளித்தரும் சிரிக்கும் புத்தர் சிலையை எந்த திசையில் வைக்கக்கூடாது...?

எல்லோருடைய வீட்டிலும் அதிர்ஷ்டத்தை கொண்டு வர ஏதாவது ஒரு பொருளை வீட்டில் வைப்பது வழக்கமாகி விட்டது. மீனில் ஆரம்பித்து மூங்கில் செடி வரை விதவிதமான பொருட்கள் இப்போது கிடைக்கிறது. அதில் எல்லோருக்கும் பிடித்தது சிரிக்கும் புத்தர் எனப்படும் சிரிக்கும்  புத்தர் சிலை. 
கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதால் குடும்பதிற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும்  மனகஷ்டம் தீரும். கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான  எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
 
துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டில் நிலவும் மந்தமான சூழல் மாறி சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் தோற்றமே, நம் கவலைகளையும், மன அழுத்தங்கள் மற்றும்  துன்பங்களை போக்கும் என்றும் நம்பிக்கை உண்டு.
 
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் வேண்டுவோர்,சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீது வைக்கலாம். மாணவர்களும் இச்சிலையை படிக்கும் போது தங்கள் அறையில் படிக்கும் மேஜையின் மீது வைத்துக் கொண்டால், கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை  ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும்.


 
சிரிக்கும் புத்தர் சிலையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.  தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
 
புத்த மதத்தால் பெரிதும் மதிக்கப்படும் சிரிக்கும் புத்தரை மிகவும் மரியாதையாக வணக்க வேண்டும்.இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும் என்பதால், அதற்கு மதிப்பளிக்க தவறக்கூடாது. இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது  தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது.
 
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிசச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் இந்த சிலையை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி இருக்குமாறு வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.