முருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....?

உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை தன் தந்தத்தால் எழுதியவர் விநாயகர்.
வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும். மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும். மாமரத்து  விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
 
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும். அரசமரத்து  விநாயகரை வழிபட விளைச்சல் கூடும். வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
 
விநாயகரின் ஆறுபடை வீடுகள்:
 
1. திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்.
2. திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்.
3. திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4. மதுரை ஆலால சுந்தர விநாயகர்.
5. பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்.
6. திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.


இதில் மேலும் படிக்கவும் :