செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:53 IST)

அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் !!

அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் !!
இயற்கையாகக் கிடைக்கும் மண்ணால் கொண்டு செய்யப்படும் அகல் விளக்கு அளப்பரிய பலன்களை கொடுக்கும்.


அகல் விளக்குகள் நவக்கிரகங்களையும் தத்துவமாக தன்னுள்ளே அடக்கியுள்ளது. அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்.

1). அகல் விளக்கு = சூரியன்

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

3.) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.