வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: குளித்தலையில் 8 ஊர்களை சார்ந்த சுவாமிகள் காவிரி நதியில் புனித தீர்த்தவாரி

கரூர் அருகே குளித்தலையில் 8 ஊர்களை சார்ந்த சுவாமிகள் காவிரி நதியில் புனித தீர்த்தவாரி நடத்தி பின்பு தைப்பூச திருவிழா நிகழ்ச்சி கோலாகலம். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி எழுந்தருளியுள்ளது இக்கோயிலாகும். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், இராஜேந்திரம் மத்யாகனேஸ்வரர் கோயில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில், திருஈங்கோய்மலை மரகதீஸ்வரர் கோயில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர்  கோயில், வெள்ளுர் திருக்காமேஸ்வரர் கோயில், பெட்டவாய்த்தலை மத்வான் தியார்ஜுனேஸ்வரர் கோயில் ஆகிய 8 கோயில்களில் இருந்து  சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சிகொடுப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சி ஆகும். 
 
தைப்பூச திருவிழாவான நேற்று (21-01-19) மாலை 5.30 மணிக்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் எல்லை முன்பு மற்ற 7 ஊர்  சாமிகளை வரவேற்று, பின்னர் காவிரி ஆற்றில் 8 சுவாமிகளும் பக்தர்களுக்கு அருள்பாளித்து 8 சுவாமிகளும் காவிரி ஆற்றில் மூழ்கி  தீர்த்தவாரி நடந்தது. இதன் பின் 8 சுவாமிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் விடிய விடிய பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர் 8 ஊர்  சுவாமிகளும் போட்டிபோட்டு விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த தைப்பூச விழாவிற்கு குளித்தலை சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
 
மேலும் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வந்திருந்தனர் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக இது விளங்கி வருவதால் இதற்காக சிறப்பான போலிஸ் பாதுகாப்பு மற்றும்  தீயணைப்பு வண்டி, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு வருகை புரியும்  அனைவருக்கும் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் விடிய விடிய இனிப்பு பொங்கல், தக்காளி சாதம் அன்னதானமாக  வழங்கப்பட்டு வருகிறது. பின்பு காலை அனைத்து சுவாமிகளும் கலைந்து சென்றன. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர்.