1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதூர்த்தி!

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு விஷேச மஹா தீபாராதனை  நிகழ்ச்சி.

கரூர் நகரில் தேர்வீதியில் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு, உற்சவர், மூலவர் சுவாமிகளுக்கு விஷேச மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அலங்கரிக்கப்பட்ட விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக  நடத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர். மேலும், சங்கடங்களை தீர்க்கும். சங்கடஹர சதூர்த்தி அன்று விநாயகரை தரிசித்தால் கோடி நனமை உண்டாகும் என்பது பொருள் ஆகும்.