ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: மாரியம்மன் ஆலயத்தில் புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்

கரூர்: உலகில் வாழும் அனைவரும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டி கரூர் அருகே இலாலாபேட்டை மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 12 மதிப்பிலான பணத்தினை கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து வழிபட்ட பொதுமக்கள்.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலாலாபேட்டை பகுதியில் கடைவீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு கடைவீதி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், ஆங்கிலப்புத்தாண்டினை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு முன்னர் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்  செய்யப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகளினால் ரூ 2 ஆயிரம், ரூ 500, ரூ 200, ரூ 50 மற்றும் ரூ 10 என்று அனைத்து விதமான இந்திய ரூபாய்  நோட்டுகளினாலும், பணங்களினால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
 
முற்றிலும் புதிய ரூபாய் நோட்டுகளினால் அலங்கரிக்கப்பட்ட இந்த அம்மன் அலங்காரமானது உலகில் வாழும் அனைவரும் நலமுடன் இருப்பதற்காகவும், அனைவரும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்காக வேண்டி சிறப்பு  பூஜைகளும், தீபாராதனைகளும் செய்யப்பட்டது. அனைவரும், அப்பகுதியை சார்ந்த மக்களினால் சேகரிக்கப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகள் சுமார் 12 லட்சம் மதிப்பில் என்றும் இந்த பணத்தினை பக்தர்கள் தங்களது வங்கிக் கணக்கில் வைத்து கொண்டால், மீண்டும் செல்வம் பெருகும் என்றும் ஒரு சிலர் பீரோ மற்றும் வீட்டிற்குள்ளும் வைத்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகின்றது. 
 
இதற்கான முழு ஏற்பாடுகளை இலாலாபேட்டை கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
பேட்டி : ராமு – ஊர் பொதுமக்கள் – ஆன்மீக ஆர்வலர் – இலாலாபேட்டை - சரவணா – கோயில் குருக்கள் – கடைவீதி மாரியம்மன்  ஆலயம்.

சி.ஆனந்தகுமார்