வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறமுடியுமா...?

சில வீடுகளில் காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது. 

சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களால் தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை, கெடுதலை தடுப்பதற்காகத்தான், காகம் எச்சிலை போட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணம் செல்பவரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.
 
ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும். பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் லாபம் ஏற்படும்.
 
வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது. ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு.
 
ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.
 
காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை தெரிவிக்கிறது. இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதை அறிவிக்கிறது.
 
காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. காகத்திற்கு உணவு வைக்கும் போது, எமதர்மனின் ஆசீர்வாதம் மற்றும் விநாயக பெருமானின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.