அமாவாசை நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவது சரியா....?

Sasikala|
கோலம் என்பது ஒரு சக்கரம் இது நம் வீட்டிற்க்கு நேர்மறை சக்தியை மட்டுமே உள்ளே அனுப்பும். எதிர்மறை சக்தியை தடுக்கும் உள்ளே நுழைய விடாது. அதனால்  தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனர் நமது முன்னோர்கள் நச்சு பொருள்களும் வாரமல் இவ்வாறு தடுத்த்னர்.

அமாவாசை மற்றும் தர்பண தினங்கள் என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது. நாம் அவர்களை தெய்வமாக பாவித்தாலும், அவர்கள் ஏதிர்மறை சக்தியே, அவர்களை வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும். உள்ளே தலைவாழை இலை விரித்து விருந்து வைத்து கதவை தாள்இட்டு மூடியது  போல்தான். அவர்களால் வந்து உண்ண முடியாது. எனவேதான் அமாவாசையன்றும் மற்ற தர்பணகாலத்திலும், ஸ்ரார்தகாலத்திலும் கோலம் போட கூடாது.
 
இந்த மகாளய பட்ச காலத்திலும் ஒருநாள் தர்பணம் செய்தாலும், ஹிரண்யமாக செய்தாலும், ஸ்ரார்தமாக செய்தாலும், பட்சகாலத்தில் முழுவதும் தர்பணம்  செய்தாலும் 15 நாட்களுக்கும் பித்ருக்கள் வருகை புரிவதால் 15 நாளும் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.


இதில் மேலும் படிக்கவும் :