வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:30 IST)

தைப்பூச நாளில் விரத முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும்...?

தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருகனின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் உண்டாகும்.


பொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோரு மே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்க ளுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கிவிடு வார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.

மாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிட கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குணமாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவ ராக இருக்கிறவர்கள் முருகனை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.