1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விரைவில் பணம் சேர சில ஆன்மீக குறிப்புகள்...!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண் பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். தினசரி புதிதாக செய்யவும்.
சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு  அரிசியில் புதையுமாறு செய்யவும். அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை இட்டு புதையுமாறு வைக்கலாம்.

இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை. ஆறு மதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். நாணயங்களை  எடுத்து கொண்டு அரிசியை காகைக்கு இட்டு விடலாம்.
 
வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும். வீட்டினுள் தென் கிழக்கு மூலையில் அரை கிலோ சோளம் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். மாற்றுகையில் சோளத்தை பறவைகளுக்கு இட்டு விடலாம்.
 
இதை பௌர்ணமியில் ஆரம்பிக்கவும் : அனுதினமும் வெளியே கிளம்பும் நேரம் சிகப்பு குங்குமம் கொண்டு இடது கையில் ஒரு குச்சியால் ரூபாய் சின்னம் அதாவது  "ரூ." அல்லது ஆங்கிலத்தில் Rs. என எழுதி கொள்ளவும். அடிக்கடி இதை பார்த்து வரவும். தொடர்ந்து பதினைந்து நாட்கள், அதாவது அமாவாசை வரை செய்து  வந்தால் விரைவில் பணம் சேரும்.