ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா....?

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் எழுந்தருளி இருப்பவர் கருடன். திருவிழா காலத்தில் கருடசேவையில் பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு.

கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறி. சுவாதியன்று  மாலை நேரத்தில் கருடதரிசனம் மிகவும் விசேஷம்.
 
புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கருட வாகனத்தின் மீது பெருமாள் பவனி வருவார். கஜேந்திரன் என்னும் யானை, முதலையிடம் சிக்கித்தவித்த போது, பெருமாள் வைகுண்டத்தில் இருந்து லட்சுமியுடன் கருடன் மீதே பறந்து வந்தார்.
 
பறவைகளில் கருடன்தான், ராஜபட்சி. அதாவது பறவைகளின் தலைவன். அப்பேர்ப்பட்ட பறவைகளின் ராஜாவான கருடன், ஆழ்வார் எனும் பெருமைமிகு சொல்லைப் பெற்றுக்கொண்டு, பெரிய திருவடியாக, கருடாழ்வாராக ஆலயங்களில் காட்சி தருகிறார்.
 
மாதந்தோறும் வருகிற வளர்பிறை பஞ்சமி திதி நாளில், கருடாழ்வாரை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் கருடாழ்வாரை வணங்குவது வளம் சேர்க்கும்.
 
நாம் வெளியே செல்லும் தருணத்தில், கருடன் வலமிருந்து இடம் சென்றால், எடுத்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். அதேபோல், கருடன் வட்டமிட்டுப் பறந்தால், நலமும் வளமும் நிச்சயம். தேசமும் சுபிட்சம் பெறும்.