ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துவது ஏன்...?

பொறாமையுடன் தீய எண்ணத்துடன் நம்மை ஒருவர் பார்த்தால், அவரது பார்வையே நம்மை பாதிக்கச் செய்யும். இதையே திருஷ்டி என்கிறார்கள். இவ்வாறு ஏற்படும் திருஷ்டி தோஷத்தைப் போக்க, பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இவைகளில் ஒன்றுதான் எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம் பழத்தின் மூலம் திருஷ்டி தோஷத்தை விலக்கலாம். நல்ல பழுத்த மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம் பழத்தை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி,  யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சூரியனை நோக்கி நிற்க வைத்தோ, அல்லது உட்கார வைத்தோ, மூன்று முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை  கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என நான்கு திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி கழித்தல் ஆகும்.
 
எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.
 
எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி திருஷ்டி கழிக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை, அந்தப் பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ  கூடாது. எலுமிச்சம் பழத்துக்கு திருஷ்டி தோஷத்தை விலக்கும் சக்தி உண்டு என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.