எந்த எண்ணெய்யை கொண்டு விளக்கு ஏற்றக்கூடாது தெரியுமா...?
விளக்கு ஏற்றும் திசை பலன்கள்: கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும்.
வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.
விளக்கு ஏற்றும் எண்ணெய்: முதலில் விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம். சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயினாலும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. இவையெல்லாம் நம் வீட்டில் தரித்ரியத்தை கொண்டு வைந்து சேர்க்கும்.
நெய்யில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும். எதை நினைத்து அந்த தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும். நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்.
தேங்காய் எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை உண்டு செய்யும். இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் சகலகாரியத்திலும் வெற்றியை பெற்று தரும். ○விளக்கெண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும்.