1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (10:40 IST)

பிரதோஷ காலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது ஏன் தெரியுமா...?

Lord Nandi
மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.


இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள்,ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு,சிந்தாமணி, கௌஸ்துப மணிமுதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின.

லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்றபொருட்களை இந்திராதி தேவர்கள்ஏற்றுக்கொண்டனர்ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர்.

உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.