1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அர்ஜூனன் வைத்திருந்த காண்டீபம் யார் கொடுத்தது தெரியுமா...?

காண்டவ வனத்தை அர்ஜூனன் அக்னி தேவனுக்கு உணவாகப் படைத்ததால் - அக்னி தேவன் மனம்மகிழ்ந்து அர்ஜூனனுக்குப் பரிசளித்தது காண்டீபம் (காண்டவவனம் - காண்டீபம்).

காண்டீபம் - பனைமரத்தளவு உயரம் கொண்டது . காண்டீபம் சொர்க்கத்தில் உள்ள காண்டீ என்ற மரத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
 
காண்டீவத்துக்கு தங்கக் கவசம் உண்டு - லட்சம் ஆயுதங்களுக்கு சமமான சக்தி உடையது. (லட்சம் வில்களுக்கு அல்ல - லட்சம் ஆயுதங்கள் என்றால் - வாள், சக்ரம், ஈட்டி, கதாயுதம் என பல வகையை குறிக்கும்).
 
பல வர்ணம் கொண்டது - மிருதுவானது- தேவர்கள் - கந்தர்வர்கள் பூஜித்தது.
 
காண்டீவம் - 1000 வருடங்கள் பிரம்மதேவனிடமும் - பிரஜாபதியிடம் 503 வருடங்களும் - இந்திரன் வசம் 85 வருடங்களும், சந்திரன் 500 வருடங்களும் வருணனிடம் 100 வருடங்களும் வைத்து இருந்தனர்.
 
இந்த வில்லை கந்தர்வர்களும், தேவர்களும் வழிபட்டனர். காண்டீபத்தில் எய்யப்படும் அம்பு இடிமுழக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கொண்டே ஜயத்திரதன் தலையை கொய்தும், கர்ணனைக் கொன்றும், பீஷ்மரை காயப்படுத்தியும் வென்றான் அருச்சுனன்.