1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2022 (11:01 IST)

கதலி கௌரி விரதம் என்பது என்ன தெரியுமா...?

Gowri Viratham
கதலி கவுரி விரதம் வாழையடி வாழையாக குலம் தழைக்கும். வாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஸ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல்.


உடலுக்கு உற்சாகத்தையும், மனத்துக்கு தெய்விக சக்திகளையும் அளிப்பவள் இந்த தேவி. இவளுடன் திரைலோக்கிய (மோஹன) கணபதி வீற்றிருப்பதால், சகல காரியங்களிலும் ஸித்தியையும் அளிப்பாள்.

இந்த விரத நாளில் ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்குக் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம்.

கதலி கௌரி விரதம். இந்த விரதத்தின் மூலமாக பெண்களுக்கு அழகும்  வசீகரமும் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். கதலி மரம் என்பது வாழைமரத்தைக் குறிக்கும்.

வாழை மரத்தடியில் கௌரி விரதம் இருக்க வேண்டும், அல்லது வீட்டில் பலகையில் வாழை இலையை வைத்து, அதன்மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும். 108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர், அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும்.