1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பணவசியம் பெற சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?

பண கஷ்டம் இல்லாதவர்கள் இருப்பது மிக குறைவு. அதற்காக நாம் பல முறை கடவுளிடம் வேண்டி இருப்போம். ஆனால் அது நீங்கள் வேண்டியும் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஆழ்மனதில் மனதார செய்தால் நிச்சயம் அதிக பணம் சம்பாதிக்கலாம். நாம் தினமும்  காலையில் எழுந்து குளித்து முடித்த உடன் கடவுளை வணங்குவதை வழக்கமாக வைத்திருப்போம். அப்போது கண்களை மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதிலிருந்து மனதார சொல்லுங்கள்.
 
மந்திரம்:
 
“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”
 
பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் உங்களை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 
உங்களின் விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் நீங்கள் அறியாமலேயே வந்துவிடும். உங்கள் மனதில் அந்த எண்ணம் வந்து விட்டாலே போதும் நீங்கள்  எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடுவீர்கள். அதிக பணம் சம்பாதித்து நிம்மதியுடன் வாழலாம்.