1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து சேர்த்திடும் அற்புத சக்தி கொண்ட தர்பை புல் !!

தர்பை புல் என்பது எண்ணற்ற அபூர்வ சக்திகள் தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகை என்று கூறலாம். அதனால் தான் கும்பாபிஷேகத்தில் கலசம் உள்ளே நிரப்பும் முக்கிய பொருட்களில் ஒன்றாக தர்ப்பை விளங்குகிறது. 

முக்கிய சடங்கு சம்பிரதாயங்கள் இந்த புனித தர்பை இல்லாமல் நடைபெறுவதில்லை. அத்தகைய சக்தி வாய்ந்த தர்பை புல் ஒன்றை முழுமையாக எடுத்து கொள்ளவும். சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தாயத்து ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். நிறைந்த பௌர்ணமி தினத்தில் மாலை பூஜை  வேளையில் பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த தர்பை புல்லை சிறிய அளவில் மடித்து கொண்டே வர வேண்டும். 
 
சரியான முறையில் சீராக மடித்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த தாயத்தினுள் தர்பைபுல்லை நுழைத்து விட வேண்டும். அதனுடன் சுத்தமான விபூதி சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக இருக்கமாக மூடி விட வேண்டும். இந்த தாயத்தை கைகளில், கழுத்தில் அணிந்து கொண்டால் இறை சக்தி  ஈர்க்கப்பட்டு உங்களுடைய உண்மையான வேண்டுதல் பிரபஞ்சத்தின்பால் கொண்டு சேர்க்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நினைத்த காரியங்கள் கை கூடும். 
 
உங்களுடைய வேண்டுதல் நன்மைக்காக இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் உங்களையே பின் தொடரும். தீவினை சூழும். எனவே எண்ணங்கள் நல்லனவாக  இருக்க வேண்டும். நன்மைக்காக வேண்டிய வேண்டுதல் கட்டாயம் இதன் மூலம் நிறைவேறும். சுத்த விபூதியில் ஈச சக்தி அடங்கியுள்ளது. விபூதி தர்பையுடன் சேர்ந்து நமக்கு இறை ஆற்றலை பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.
 
நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் நல்லதோ, கேட்டதோ, இரண்டு காரியங்களை  செய்யும் போதும் தர்பையினால் ஆனா மோதிரத்தை ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். 
 
ஹோம குண்டங்களில், யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும்  என்பதற்காகத்தான். எந்த சடங்கையும் செய்யும்போது அதை ஏன் விரலில் ஒரு மோதிரம் போல போட்டுக் கொள்கிறோம் என்றால், அது நம்மைக் பாதுகாக்கும்  சக்தியாகவே பாவிக்கப்படுவதே தர்ப்பைப் புல். தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.