வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தேவி மகாலட்சுமியின் அருளை பெற தனாகர்ஷன ஹோமம்....!

குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாக தனாகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். வட நாட்டில் தனலட்சுமி பூஜையாக தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. தாம் சேர்த்த பொருளையெல்லாம் பூஜையில் வைத்து வழிபடுவர்.
தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் இந்த ஹோமத்தைச் செய்யலாம்.இதனால் தொழில், வியாபார வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும் செல்வமும் பெருகும்.
 
தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலைக்காக்க. மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலை சிறந்தது. அதை பெற்றுத்தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும். 
 
விடியற்காலையில் குளித்து சுத்தமான துணி உடுத்தி திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். சங்கல்பம் செய்து கொள்ளவும் பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும் வட்டமான ஹோம குண்டத்தில் கிழ்க்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமிதா தானம் செய்யவும்.
 
பிறகு சுத்தமான பசு நெய், தாமரைப்பூ, தங்கக் காசு, சர்க்கரை பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி ஹிரண்யவர்ணா... என்ற தேவ மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹீதி செய்து ஹோமம் முடிக்கவும். கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்துமங்கள ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும். மலையான தேசத்தில் தங்கத்தை உருக்கி நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்தார்களாம்.
 
சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு, பிரசாதம் எடுத்துக் கொள்ளவும். இதனால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு அருள்வாள் என்கிறது வேதம்.