செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல தோஷங்களையும் நீக்கும் வலம்புரி சங்கு பூஜை செய்வது எப்படி...?

வலம்புரி சங்கை நம் வீட்டு அறையில் வைத்து நாம் தொடர்ந்து பூஜை செய்து வந்தால் தோஷங்கள் நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யத்தையும் அள்ளி தருவார் தேவி மகாலக்ஷ்மி. நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள். அப்போது செல்வ வளம் அதிகரிக்கும்.
தினமும் வலம்புரி சங்கை வழிப்பட்டு வந்தால், தோஷம் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும். தினமும் வலம்புரி சங்கை வழிபட்டு வந்தால், தோஷம் நீங்கும். வலம்புரி சங்கில் துளசி கலந்த நீரை தினமும் காலை வேலையில் தெளித்து வந்தால் வீட்டில் வாஸ்து குறைப்பாடுகள்  நீங்கும். 
 
இந்த வலம்புரி சங்கு பூஜையை செய்ய, காலையிலே குளித்து, விளக்கேற்றி விட்டு செய்ய வேண்டும். வாரம் 2 முறை அல்லது முடிந்தால்  தினமும் கூட இந்த பூஜை செய்யலாம். வாரம் 2 முறையென்றால் அதாவது செவ்வாய், வெள்ளி தினங்களில் செய்ய வேண்டும். ஆனால் இந்த  சங்கு பூஜை செய்கிற நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது.\
 
முதலில் நாம் சங்கு பூஜை செய்ய தீர்த்த பொடி தயார் செய்யவேண்டும். இந்த தீர்த்த பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 
ஜாதிக்காய் - 1, ஏலக்காய் - 5 கிராம், லவங்க பாதிரி - 5 கிராம், லவங்கம் - 5 கி, பச்சை கற்பூரம் - 5 கிராம். முதலில் ஜாதிக்காயை ஒரு  அம்மிக் கல்லில் போட்டு தட்டி கொள்ளவேண்டும். பிறகு மீதி இருப்பதை எல்லாம் சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்து எடுத்து  கொள்ளலாம். 
 
பூஜை செய்ய ஒரு குறைபாடும் இல்லாத வலம்புரி சங்கை வெள்ளி தட்டில் வைத்து பூஜை செய்யவேண்டும்.. வெள்ளி தட்டில் வைப்பதன்  மூலம் அந்த சங்கின் சக்தி பல மடங்கு உயரும். அதன் பிறகு அந்த வலம்புரி சங்கில் மஞ்சள், குங்குமம் வைத்து விட்டு வெள்ளி தட்டிலேயும்  மஞ்சள், குங்குமம் வைத்து விட வேண்டும். 
 
இந்த வலம்புரி சங்கை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வலம்புரி சங்கில் ஒரு பூ வைத்து, அதில் கொஞ்சம் தண்ணீர்  விட்டு அதனுடன் பொடி செய்து வைத்திருக்கும் தீர்த்த பொடியை சிறிதளவு எடுத்து அதனுடன் கலந்து விடவும். பிறகு நீங்கள் வீட்டில் எப்படி  பூஜை பண்ணுவீர்களோ அதன் படி வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம் இவற்றையெல்லாம் வைத்து பூஜை பண்ணலாம். பூஜை  செய்யும்போது ஒரு விரிப்பின் மீது அமர்ந்து விளக்கு அல்லது குத்துவிளக்கு பார்த்து பூஜை செய்ய வேண்டும்.  பூஜையின் போது, இந்த  மந்திரத்தை சொல்லுவது நல்லது.
 
மந்திரம்:
 
ஓம் பவன ராஜாய வித்மஹே
பாஞ்சஜன்யாய தீமஹி
 
இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 54 முறை சொல்லலாம்.. மந்திரத்தை நீங்க சொல்லும் போது, மனதில் ஏதாவது நல்ல காரியங்கள் மனதில் நினைத்து, விளக்கை பார்த்து மந்திரத்தை சொல்ல வேண்டும். மந்திரத்தை சொல்லி முடிந்த பிறகு வலம்புரி சங்கில் இருக்கும் தீர்த்தத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கலாம். நீங்கள் சொன்ன மந்திரத்தை அந்த தீர்த்தம் ஈர்த்து கொள்ளும். இந்த வலம்புரி  சங்கை நாம் வணிகம் செய்யும் இடத்திலும் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால், செல்வ வளம் கிடைக்கும்.