வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீபாவளி: சாஸ்திரப்படியான எம தீபம் எவ்வாறு ஏற்றவேண்டும்...?

தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யமதீப திரயோதசி எனப் பெயர். அன்று மாலை எமதர்ம ராஜாவை வழிபட வேண்டும். 

இந்த வழிபாடு அறியாமல் செய்த பாபவங்களையும், யம பயத்தையும் போக்கும். வீட்டில் எவ்வளவு நபர்கள் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண்விளக்கு வீதம் அவரவர்களைக் கொண்டே அகல் தீபங்களை தனது வீட்டு வாசலிலோ அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ ஏற்றி வைக்க  வேண்டும்.
 
மாஹாளய அமாவாசை வந்த நமது முன்னோர்கள் அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. 
 
எம தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும். யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. 
 
மாலை நேரத்தில், உங்கள் வீட்டு வாசலில் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். மண் அகலில்  நல்லெண்ணெய்விட்டு விளக்குகள் ஏற்றிவைத்தல் வேண்டும். 
 
தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர்,  உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும். தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.