1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆஞ்சநேயரை வழிபட ஏற்ற நாட்களும் பலன்களும் !!

ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தால் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார். 

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். துளசி மாலையும், வெற்றிலைச் சுருள் மாலையும்  ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. 
 
அனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும். அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம்  அவரது ஆசியைப் பெறலாம்.
 
வெற்றிலை மாலை சார்த்தி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். நல்ல உத்தியோகமும் உத்தியோகத்தில் பதவி  உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கடன் தொல்லை நீங்கும்.
 
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை.
 
குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். மன தைரியம் ஹனுமனை பிரார்த்திப்பவர்களுக்கு அளித்து  காப்பான்.