Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சித்திர குப்தன் தோன்றியது எவ்வாறு? - புராண கதை

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் "சித்ரா பெளர்ணமி "கொண்டாடப்படுகிறது .இந்த நன்னாளில் தான் அன்னை  பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள். 
அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் "நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து, தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார். இந்த அற்புதத்தை  கண்ட பார்வதி தேவி, மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயர் வைத்தாள்.
 
ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை  அதிகமாகிக் கொண்டே போனது .தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார்.இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்று நீங்களும், விஷ்ணு பகவானும்  எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?. ஆனால் யார் எவ்வளவு பாவ ,புண்ணியங்கள் செய்தார்கள் என்று தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா.
 
பிரம்மாவிடம் சென்று தன் கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா. பிரம்மா யமதர்மரிடம், சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியம் செய்கிறார்கள்  என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார்  பிரம்மதேவர்.


இதில் மேலும் படிக்கவும் :