நவ கிரகங்களும் பைரவரின் உப சக்திகளும் எவை தெரியுமா...?
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.
தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
நவ கிரகங்கள் பிராணபைரவர் மற்றும் பைரவரின் உப சக்தி:
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் - பைரவி
சந்திரன் கபால பைரவர் - இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் - கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் - வராகி
குரு அசிதாங்க பைரவர் - பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் - மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் - வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் - சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் - சாமுண்டி.