ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (18:06 IST)

வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவம் குறையும் சங்கடங்கள் தீரும்.


விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதமிருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதன்படி, ருக்மாங்கதன் என்ற அரசர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டு, தனது  நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, மதிய உணவு முடித்து கொண்டு இரவு சாப்பிடாமல் இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், பகவானின் பாடல்களையும் பாட வேண்டும் ஸ்ரீமத் பாகவதம் ராமாயணம் தாசாவதாரம் இன்னும் சிறப்பான பலன்களை தரும்..

ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள் முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று ஸ்ரீமந் நாராயணனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும்.