1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 1 மே 2018 (14:37 IST)

மே மாத எண்ணியல் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பவரான மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம்.

வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.