வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பணம் ரீதியாக ஏற்படும் சிக்கல்களுக்கான அற்புத பரிகாரம் !!

உங்கள் வீட்டில் இருக்கும் மணிபிளான்ட் செடியின் தொட்டி கட்டாயம் பச்சை நிற வண்ணத்தில் இருக்க வேண்டும். பச்சை நிற வண்ணத்தில் இருந்தால் அதற்கு சக்தி அதிகம். 

உங்கள் வீட்டு மணிபிளான்ட் தொட்டியை முதலில் பச்சை நிற வண்ணத்திற்கு மாற்றங்கள். அதன் பின்பு இந்த புதன்கிழமை அன்று, அந்தத் தொட்டியை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். 
 
செடியைப் வைத்த புதன் கிழமையை விட்டுவிட்டு, அடுத்த புதன் கிழமை அன்று அந்த மணிபிளான்ட் செடியின் வேர் பகுதியில் இருந்து, சிறு துண்டை கத்தி படாமல், விரல்களால் கிள்ளி எடுக்க வேண்டும். வேரை எடுப்பதற்கு முன்பு, செடியிடம் மானதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய நலனுக்காகத்தான் இந்த வேர் எடுக்கப்படுகிறது என்றவாறு சொல்லுவது நல்லது. 
 
செடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மண்ணைத் தோண்டி, செடியிலிருந்து வேரை எடுத்துக்கொண்டு, அந்த வேரை சிறிது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கழுவி, ஒரு சிகப்பு துணியில் கட்டி புதன்கிழமை அன்று நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். பணம் ரீதியாக உங்களுக்கு இருக்கும் பல சிக்கல்களுக்கான தீர்வினை கொடுக்கும்.
 
உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மணிபிளான்ட் செடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிலைமை சரியான பின்பு ஒருமுறை, புதிய மணி பிளான்ட் செடியை வாங்கி வைத்து அந்த பழைய வேரை புதுப்பித்துக் கொள்ளலாம்.