புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:16 IST)

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் அற்புத பரிகாரங்கள் !!

பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி, பின் ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் இந்த தோஷத்தின் கடுமை குறையும்.

அமாவாசை தினங்களில் மாலை அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்க வேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றி வந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
 
மிகவும் தொன்மையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.
 
ராமேஸ்வரம் கடலில் நீராடி பின் கோவிலில் அமைந்திருக்கும் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
 
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து மற்றொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.