வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அகத்தியர் கூறும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள்...!

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் எனப்படும் வர்மக் கலைதான்.

வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்களின் கலையான வர்மக்கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.
 
அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கலான ஒடிவுமுறிவுசாரி: வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு  வர்மம்”
உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்: தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும், நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், 3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும், 4. முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும், 5. கைகளின் முன்  பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும், 6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும், 7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும், 8. கால்களின் பின்பக்கம் 13 வர்மப் புள்ளிகளும், 9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகள்.
 
அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்கும் உதவியது.