1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (21:30 IST)

ஆனி மாத ராசிபலன்கள் 2023! – துலாம்!

Monthly Astro Image
கிரகநிலை:


ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு  - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சந்திரன்   - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்  என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
18-06-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

04-07-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.   

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சுவாதி:
இந்த மாதம் உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும்.
பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். 

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17; ஜூலை 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 7, 8