1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (11:11 IST)

ஆடி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Monthly astro
வ்ருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் முடிவில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செலவு கட்டுக்குள் இருக்கும்.



தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்:
சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை  சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

அனுஷம்:
எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.  துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

கேட்டை:
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில்  கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.