Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

Sasikala| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:21 IST)
கும்பம் - (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3
பாதம்) மற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும்
திறமை உடைய கும்ப ராசியினரே நீங்கள் ரகசியம் காப்பதில் வல்லவர். இந்த குருப் பெயர்ச்சியில் குறிக்கோளற்ற பயணங்கள்
அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை
தவிர்ப்பது நல்லது.
சுபசெலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி
நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.
சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால்
உடல் சோர்வடைவார்கள்.

குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். ராசிக்கு 6ல் சுக்கிரன், கேது சஞ்சாரம் செய்வதால் கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.

பெண்களுக்கு: வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு: கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ணன்


இதில் மேலும் படிக்கவும் :