1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (13:34 IST)

2015 - குருபெயர்ச்சி பொதுப்பலன்கள்

வேதவிற்பன்ன கிரகமான பிரகஸ்பதி என்கிற குருபகவான் தனது உச்ச வீடான கடகத்தில் கடந்து ஒராண்டு காலமாக அமர்ந்து நானிலமெங்கும் பலவித மாற்றங்களையும் உருவாக்கினார். தற்போது ஆத்மகாரகனும் அரசியல், அரசாங்க, அதிகார கிரகமுமான சூரியனின் வீடான சிம்மத்தில் அமர்கிறார்.

5.7.2015 முதல் 1.8.2016 வரை ஸ்திரவீடு மற்றும் குருவளையம் வீடுமான சிம்மத்திலிருந்து சிலருக்கு சிம்மாசனத்தை தருவதுடன் பலருக்கு சிம்ம சொப்பனமாகவும் இருக்கப் போகிறார். 


 

குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் கல்வி நிறுவனங்கள் தழைக்கும், உலகத் தரத்திற்கு ஈடுஇனையாக இந்திய கல்வி நிறுவனங்களை மேம்படுத்த படிப்படியாக புதிய சட்டதிட்டங்களை அரசுக் கொண்டு வரும். தகுதியற்ற அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி அரசால் அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் முக்கியத்துவம் பெறுவார்கள்.

ரூபாய் நோட்டில் பல மாற்றங்கள் செய்யப்படும். நவீனமாக அச்சடிக்கப்படும். பழைய தியாகிகளின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறும். கள்ளப்பணப்புழக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்கு புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும். ஒன்றாம் எண் முக்கியத்துவம் பெறும். காடு, மலை, நதிகளை காப்பாற்ற புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை கட்டுப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். மருந்துகள் விலைக்குறையும். பெரியளவிலே அறுவைசிகிச்சை இல்லாமல் இரத்த இழப்பில்லாமல் இதய நோயை குணப்படுத்தும் விதம் கண்டறியப்படும்.

பழைய கல்வெட்டுகள், புதைந்துக் கிடக்கும் விக்ரஹங்கள் வெளிபடும். வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். நீதித்துறையில் வெளிப்படையான தீர்ப்புகள் வெளியாகும். புதிய நீதிமன்றங்கள் கட்டப்படும். புதிய நீதிபதிகளும் நியமிக்கப்படுவார்கள். வானியல் ஆராய்ச்சியில் சூரிய மண்டலம் மற்றும் சனிமண்டலம் குறித்த அதிசயங்கள் கண்டறியப்படும். ஜனநாயகம் தழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஆளுபவர்களின் அனைத்து அந்தரங்க நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்துக் கொள்வார்கள்.

தனக்காரகனான குருபகவான் காலபுருஷனின் ஒன்பதாவது வீட்டை பார்ப்பதால் வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தை குறைக்கும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களும் கடனை எளிதாக பெறும் அளவிற்கு சட்ட விதிகள் தளர்த்தப்படும். ஆனால் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்டும். பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். தங்கத்தின்மீதுள்ள மோகம் மேலும் கூடும். தங்கக் கடத்தலை தடுக்க புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்படும். மாணவர்களுடைய விழிப்புணர்வு அதிகமாகும்.

சுற்றுலாத் துறை மேம்படும். வெளிநாட்டுப் பயணிகளை கவரும் வண்ணம் புதிய விமானங்கள் இயக்கப்படும். விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக் கூடும். ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் அளிக்கப்படும். நாட்டின் எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைவோர் மீது கடுமையான தாக்குதல்கள் இருக்கும். அண்டை நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெருமை அதிகரிக்கும். யோகா, மிதிவண்டி பயிற்சி, நடைப்பயிற்சி, இயற்கை உணவு, ஆகியவை பிரபலமடையும்.

குருபகவான் கும்பராசியை பார்ப்தால் நாடெங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து புதிய தொழிற்சாலைகளை அமைக்கும். ஏற்றுமதி&இறக்குமதி துறை அசுர வளர்ச்சியடையும். குளிர்பான நிறுவனங்கள் வலுவிழக்கும். உள்நாட்டில் லாபகரமாக இயங்கும் தொழில் நிறுவனங்களின் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வாங்கும்.

சிமெண்ட், செங்கல் இல்லாமல் வீடு கட்டும் நவீன முறை அறிமுகமாகும். வளர்ந்த நாடுகளுக்கு ஈடுஇணையாக அதிக அடுக்குமாடிக் கொண்ட அதிநவீன அதிக உயரமான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் கட்டப்படும். தனியார் நிறுவனங்கள் வலுவடையும். தென்னிந்தியாவை விட வடஇந்தியா வேகமாக வளர்ச்சியடையும்.

உணவில் கலப்படத்தை தடுக்கவும், தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் கடுமையான சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஓடை, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து மாசுபடாமல் இருக்க புதிய வழிகள் கண்டறியப்படும். சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கைக் கூடும். வாகனங்களின் விலைகுறையும். வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள் மற்றும் அரவாணிகள் புகழடைவார்கள்.
 
குருபகவான் மேஷராசியைப் பார்ப்பதால் மக்களிடையே சுகாதாரம் மற்றும் பாலியல், விழிப்புணர்வு அதிகரிக்கும். அழகு சாதனப் பொருட்களின் விலை உயரும். தலை சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். சட்டத்திற்கு புறம்பான ஹவாலா உள்ளிட்ட பணப்பட்டுவாடாவை தடுக்க புது சட்டங்கள் வரும்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு மையங்களுக்கு வரும் நிதிகளும் நெறிப்படுத்துப்படும். ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி துறை நவீனமாகும். விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் சூடு பிடிக்கும். மக்களின் பொது அறிவுத்திறன் கூடும். மாநிலவாரியாக கல்வியறிவு உள்ளோரின் சதவிகிதம் அதிகரிக்கும். சிறுபான்மை இனத்தவர் அனைத்துத் துறையிலும் முன்னேறுவார்கள்.

குரு கடந்து செல்லும் பாதை:


05.07.2015 முதல்  01.08.2016 வரை
 
05.07.2015 &- 22.07.2015 & மகம் 1ல்
23.07.2015 & 07.08.2015 & மகம் 2ல்
08.08.2015 & 22.08.2015 & மகம் 3ல்
23.08.2015 & 06.09.2015 & மகம் 4ல்
07.09.2015 & 21.09.2015 & பூரம் 1ல் 
22.09.2015 & 08.10.2015 & பூரம் 2ல்
09.10.2015 & 26.10.2015 & பூரம் 3ல் மற்றும்
20.5.2016  & 13.6.2016 வரை
27.10.2015 & 16.11.2015 & பூரம் 4ல் மற்றும்
14.06.2016 & 09.07.2016 வரை 
17.11.2015 & 20.12.2015 & உத்திரம் 1ல் மற்றும்
10.07.2016 & 01.08.2016 வரை 
21.12.2015 & 19.01.2016 & உத்திரம் 2ல்
 
வக்ரம் காலம்
   
20.01.2016 & 06.02.2016 & உத்திரம் 2ல் (வ)
07.02.2016 & 07.03.2016 & உத்திரம் 1ல் (வ)
08.03.2016 & 02.04.2016 & பூரம் 4ல் (வ)
03.04.2016 & 19.05.2016 & பூரம் 3ல் (வ)
 
 
பரிகாரம்
 
வாழ்க்கை நெறிகளை, அறநெறிகளை, நீதியை, பக்தியை வெளிப்படுத்தும் கிரகமான குருபகவான் பிதுர்காரகனான சூரியனின் சிம்மம் ராசியிலேயே இனி வரும் ஓராண்டு காலத்திற்கு அமர்ந்து தன் கதிர்வீச்சை செலுத்தயிருப்பதால் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து பேணி வளர்க்கும் தந்தையை மதிப்போம்.

அறிவியல் பூர்வமான ஆன்மீக சடங்குகளை பின்பற்றுவோம். உண்டு, உடுத்தி, உறங்கினோம் என்றில்லாமல் எதற்காக பிறந்திருக்கிறோம் என்ற ஆத்ம பரிசோதனைக்கு நம்மை உட்படுத்திக்கொண்டு அக்கம் பக்கம் இருப்பவர்களை நேசிக்க தொடங்குவோம். தந்தையாரை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவோம். குருபகவானின் ஆசி முழுமையாகக் கிட்டும்.